பெருகப்பண்ணுவேன் என்று வாக்குரைத்தவர்
Perugappanuvaen Enru
பெருகப்பண்ணுவேன் என்று வாக்குரைத்தவர்
மிகவும் திரளாய் பெருகச் செய்திடுவார்
வலப்புறத்திலும் இடப்புறத்திலும்
இடங்கொண்டு நீ பெருகுவாய்
ஆபிரகாமை பெருகச் செய்தவர்
உன்னையும் திராளாய் பெருகச் செய்திடுவார்
நீ மடிந்து போவதில்லை
நீ குறைந்து போவதில்லை
ஆத்துமாக்களை ஆயிரமாயிரமாய்
சபைகளில் திரளாய் பெருகச் செய்திடுவார்
நிச்சயமாய் உன்னை ஆசீர்வதித்து
பெருகவே பெருகச் செய்திடுவார்
மனிதரை ஜனங்களை மிருகஜீவங்களை
கர்ப்பத்தின் கனியை பெருகச் செய்திடுவார்