• waytochurch.com logo
Song # 15498

பசுமையான புல்வெளியில்

Pasumaiyana Pul Veliyil


பசுமையான புல்வெளியில்
படுக்க வைப்பவரே
அமைதியான தண்ணீரண்டை
அழைத்துச் செல்பவரே

என் மேய்ப்பரே நல் ஆயனே
எனக்கொன்றும் குறையில்லப்பா

நோயில்லாத சுகவாழ்வு எனக்குத் தந்தவரே
கரம் பிடித்து கடனில்லாமல் நடத்திச் செல்பவரே

புதிய உயிர் தினம் தினம்
எனக்குத் தருகிறீர்
உம் பெயருக்கேற்ப பரிசுத்தமாய்
நடத்திச் செல்கிறீர்

மரண இருள் பள்ளத்தாக்கில்
நடக்க நேர்ந்தாலும்
அப்பா நீங்க இருப்பதாலே
எனக்குப் பயமில்ல

ஜீவனுள்ள நாட்களெல்லாம்
நன்மை தொடருமே
தேவன் வீட்டில் தினம் தினம்
தங்கி மகிழ்வேனே

கரங்களாலே அணைத்துக் கொண்டு
சுமந்து செல்கிறீர்
மறந்திடாமல் உணவு கொடுத்து
பெலன் தருகிறீர்

எனது உள்ளம் அபிஷேகத்தால்
நிரம்பி வழியுதே
எல்லா நாளும் நன்றிப் பாடல்
பாடி மகிழுதே


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com