புதுவாழ்வு தந்தவரே
Puthu Vaazhvu Thandavarae
புதுவாழ்வு தந்தவரே
புது துவக்கம் தந்தவரே
நன்றி உமக்கு நன்றி
முழுமனதுடன் சொல்லுகின்றோம்
நன்றி உமக்கு நன்றி
மனநிறைவுடன் சொல்லுகின்றோம்
பிள்ளைகளை மறவாமல்
ஆண்டு முழுவதும் போஷித்திரே
குறைவுகளை கிறிஸ்துவுக்குள்
மகிமையில் நிறைவாக்கி
நடத்தினீரே
முந்தினதை யோசிக்காமல்
பூர்வமானதை சிந்திக்காமல்
புதியவைகள்
தோன்ற செய்தீர்
சாம்பலை சிங்காரமாக்கிவிட்டீர்
கண்ணீருடன் விதைத்தெல்லாம்
கெம்பீரத்தோடு அறுக்கச் செய்தீர்
எந்தி நின்ற கரங்கள் எல்லாம்
கொடுக்கும் கரங்களாய்
மாற்றிவிட்டீர்