புது கிருபைகள் தினம் தினம் தந்து
Pudhu Kirubaigal
புது கிருபைகள் தினம் தினம் தந்து
என்னை நடத்தி செல்பவரே
அனுதினமும் உம் கரம் நீட்டி
என்னை ஆசீர்வதிப்பவரே
என் இயேசுவே உம்மை சொந்தமாக
கொண்ட என் பாக்கியமே
இதை விடவும் பெரியதான
மேன்மை ஒன்றும் இல்லையே
நேர் வழியாய் என்னை நடத்தினீர்
நீதியின் பாதையில் நடத்தினீர்
காரியம் வாய்க்க செய்தீர்
என்னை கண்மணி போல காத்திட்டீர்
பாதங்கள் சறுக்கின வேளையில்
பதறாத கரம் நீட்டி தாங்கினீர்
பாரமெல்லாம் நீக்கினீர்
என்னை பாடி மகிழ வைத்தீர்

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter