Puthiya Naali Kaana புதிய நாளை காண செய்தீரே
புதிய நாளை காண செய்தீரே
நன்றி இயேசைய்யா
புதிய நாளின் ஆசீர்வாதத்துக்கு
நன்றி இயேசைய்யா
உமக்கு நன்றி நன்றி சொல்லுவேன்
உம்மை போற்றி போற்றி பாடுவேன்
கடந்த காலம் செய்த நன்மையை
எண்ணி பாடுவேன்
மலை போல் வந்த கஷ்டங்களை
பனி போல நீக்கினாரே
அலை போல் வந்த துன்பங்கள் நீக்கி
அமைதி தந்தாரே
கோலியாத்தை போல் எதிர் வந்தோரை
நிர்மூலமாக்கினாரே
பார்வோனை போல் பின் தொடர்ந்தவரை
மடிய செய்திட்டாரே
ஆபிரகாமை போல விசுவாசம்
எனக்கு தாருமைய்யா
இழந்து போன சுகம் பெலன் ஜீவன்
மீண்டும் தாருமைய்யா