• waytochurch.com logo
Song # 15519

பலத்தினாலுமல்ல என் பராக்கிரமுமல்ல

Palathinalumalla En


பலத்தினாலுமல்ல என் பராக்கிரமுமல்ல
உம் ஆவியினால் எல்லாம் ஆகுமே
நீர் வந்துவிட்டால் அது போதுமே

ஆவியானவரே ஆவியானவரே

உலர்ந்த எலும்புகளை
உயிரடையப் பண்ணுகிற
உன்னதத்தின் ஆவியே
எனக்குள்ளே (என் சபைக்குள்ளே) வாருமே

எனக்குள்ளே வாசம்பண்ணி
என்னோடு இருப்பவரே
உமக்குள்ளே வாசம்பண்ணி
உம்மோடு நடந்திடுவேன்

உம் ஆவி எனக்குள் வையும்
உம்மால் நான் உயிரடைவேன்
என்னை நீர் தேசத்தில் வையும்
உம் நாமம் உயர்த்திடுவேன்
(உமக்காய் வாழ்ந்திடுவேன்)

ஒருமனப்பட்ட போது இறங்கி
வந்த ஆவியே - ஒருமனமாய்
நிற்கிறேன் இறங்கி வாருமே

வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட
வல்லமையின் ஆவியே
வாக்குத்தத்தம் நிறைவேற
என் மேல் வாருமே
(உம் கிருபையை தாருமே)


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com