• waytochurch.com logo
Song # 15522

பாவ மன்னிப்பின் நிச்சயத்தை

Paava Mannipin


பாவ மன்னிப்பின் நிச்சயத்தை
பெற்றுக் கொள்ள வேண்டும்
பரலோகத்தில் ஓர் இடம் நீ பெற வேண்டும்

இயேசு தருகிறார் இன்று தருகிறார்
அதற்காகத் தான் சிலுவையிலே
இரத்தம் சிந்தி விட்டார்

முதன் முதலாய் தேவனுக்கு உகந்ததைத் தேடு
பின்பு எல்லாமே உனக்கு சேர்த்துத் தந்திடுவார்

நீ தேடும் நிம்மதி இயேசு தருகிறார்
நீ நாடும் விடுதலை அவரிடம் உண்டு

வருத்தப்பட்டு பாரங்கள் சுமக்கின்ற மகனே (மகளே)
நீ வருவாயா இயேசு இன்று வாழ்வு தந்திடுவார்

இரத்தம் சிந்துதல் இல்லாமல்
பாவ மன்னிப்பில்லை
இயேசு ராஜா நாமம் இல்லாமல்
இரட்சிப்பும் இல்லை - நம்ம


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com