பிரதான ஆசாரியரே
Pradahana Aasariyarae
பிரதான ஆசாரியரே எங்கள்
பிரதான ஆசாரியரே 
ஒரே தரம் பலியிடப்பட்டதனால்
என்றென்றும் பூரணப்படுத்தினீரே
எங்கள் பிரதான ஆசாரியரே
இரக்கம் பெற சமயத்தில் சகாயம் பெற
கிருபாசனத்தண்டையில் தைரியமாய் வர
கிருபை செய்தவரே
எங்கள் பிரதான ஆசாரியரே
தோளிலே எங்களை சுமப்பவரே
இதயத்தில் எங்களை பொறிந்தவரே
நியாபக குறியாய் வைப்பவரே
எங்கள் பிரதான ஆசாரியரே
பாவம் இல்லாத ஆசாரியரே
என்றென்றும் வாழ்கின்ற ஆசாரியரே
உம்மாலே வெல்கின்றோம் ஆசாரியரே
எங்கள் பிரதான ஆசாரியரே

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter