• waytochurch.com logo
Song # 15525

பொருட்கள் மேல கண்ணு போச்சுன்னா

Porutkal Mela


பொருட்கள் மேல கண்ணு போச்சுன்னா
போச்சய்யா உன் அபிஷேகம்
ஆட்கள் மேல கண்ணு போச்சுன்னா
அம்போதான் உம் அபிஷேகம்

காத்துக் கொள் காத்துக் கொள் நீ
பெற்றுக் கொண்ட அபிஷேகத்தைக் காத்துக் கொள்

பெருமை என்ற வலையில் விழாதே அது
வறுமையைக் கொண்டு வந்திடும்
பணத்திலே மயங்கி விடாதே உன்னைப்
பாதாளம் கொண்டு போய்விடும்

அழிந்து போகும் உலகப் பொருட்களால்
நண்பர்களை சம்பாதித்துக் கொள்
நீ மரித்தால் நித்திய வீட்டில்
நிரந்தரமாய் ஏற்றுக் கொள்வார்கள்

அழைத்த அழைப்பில் நிலைத்திருந்தால் நீ
அபிஷேகத்தை காத்துக் கொள்ளலாம்
அழைத்தவர் உண்மையுள்ளவர் உன்னை
அனுதினமும் நடத்திச் செல்வாரே


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com