போதகர் வந்து விட்டார்
Pothagar Vanthuvittaar
போதகர் வந்து விட்டார்
உன்னைத் தான் அழைக்கின்றார்
எழுந்து வா
கண்ணீர் கடலில் மூழ்கி
கலங்கி தவிக்கிறாயோ
கலங்காதே திகையாதே
கர்த்தர் உன் அடைக்கலம் மகளே
பாவச்சேற்றில் மூழ்கி
பயந்து சாகிறாயோ
தேவ மைந்தன் தேடுகிறார்
தேற்றிட அழைக்கிறார் மகளே
கல்வாரி சிலுவையைப் பார்
கதறும் இயேசுவைப் பார்
உன் பாடுகள் ஏற்றுக் கொண்டார்
உன் துக்கம் சுமந்து கொண்டார்