• waytochurch.com logo
Song # 15530

பகல்நேரப் பாடல் நீரே

Pagal Nera Paadal


பகல்நேரப் பாடல் நீரே
இரவெல்லாம் கனவு நீரே
மேலான சந்தோஷம் நீரே
நாளெல்லாம் உமைப் பாடுவேன் என்

எருசலேமே உனை மறந்தால்
வலக்கரம் செயல் இழக்கும்
மகிழ்ச்சியின் மகுடமாய் கருதாவிடில்
நாவு ஒட்டிக் கொள்ளும் என்

மகிழ்ச்சியின் மகுடம் நீர்தானைய்யா
என் மணவாளரே உமை மறவேன்

கவலைகள் பெருகி கலங்கும்போது
மகிழ்வித்தீர் உம் அன்பினால்
கால்கள் சறுக்கி தடுமாறும் போது
தாங்கினீர் கிருபையினால் என்

தாய்மடி தவழும் குழந்தைபோல
மகிழ்ச்சியாய் இருக்கின்றேன்
இப்போதும் எப்போதும் நம்பியுள்ளேன்
உம்மையே நம்பியுள்ளேன் மகிழ்ச்சி

பார்வையில் செருக்கு எனக்கில்லை
இறுமாப்பு உள்ளத்தில் என்றுமில்லை
பயனற்ற உலகத்தின் செயல்களிலே
பங்கு பெறுவதில்லை


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com