பிறந்த நாள்முதல்
Pirantha Naal Mudhal
பிறந்த நாள்முதல்
என் தேவனாய் இருந்தீர்
நான் தடுமாறும் போது
என்னைத் தாங்கிக்கொண்டீர்
உம்மோடு உறவாடனும்
உமக்காக நான் வாழணும்
என்னோடு நீங்க பேசிட
இப்போ வாரும்
தாயைப் போல நீர்
நான் கலங்கும் போதெல்லாம்
என் கரம்பிடித்து என்னை
நீர் தாங்கினீரைய்யா
திக்கற்று அலைந்தேன்
சோர்ந்தே போனேன்
என் தேவையை நினைத்து
கலங்கி நின்றேன்
என்னைத் தேடி வந்தீரே
மீட்டுக் கொண்டீரே
பாதுகாத்தீரே நன்றி

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter