பொன்னான நேரம் நீர் பேசும் நேரம்
Ponnaana Neram Neer
பொன்னான நேரம் நீர் பேசும் நேரம்
இன்பமான நேரம் உம்மில் உறவாடும் நேரம்
பொன்னான நேரம்
நீங்க பேசுங்க நான் கேட்கிறேன் - உம்
குரலை கேட்க ஓடோடி வந்தேனய்யா
உம் வார்த்தை எனக்கு இன்பமே இன்பம்தானய்யா
நீங்க பேசப் பேச ஆறுதல் வருது
உடைந்த உள்ளம் சந்தோஷத்தால் ஆடிப்பாடுது
உம் தழும்புகளால் காயமெல்லாம் ஆறிப்போகுது
உம் வார்த்தையினாலே மனம் புதிதாகுது
மங்கிப் போன வாழ்வு மறுரூபமாகுது
மணவாளன் இயேசுவையே தினம் தேடுது
உந்தன் பாதத்தில் என் உள்ளம் மகிழுது
உலர்ந்து போன எலும்புகள் உறுதியாகுது
கடினமான என் இதயம் கரைந்து போகுது

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter