• waytochurch.com logo
Song # 15539

பண்டிக்கை கொண்டாடுவோம்

Pandigai Kondaaduvom


பண்டிக்கை கொண்டாடுவோம் ஆம் நாம்
பண்டிக்கை கொண்டாடுவோம்

பண்டிக்கை கொண்டாடிப் பரமனைமன்றாடிப்
பஸ்கா கிறிஸ்தை நமஸ்காரஞ் செய்தாடி

புன்மைகொடும் பொல்லாப்பு புளிமா வைவிலக்கி
உண்மை பரி சுத்தமாம் உயர்மா வைப்பலுக்கி

இன்றுயிர்த்தெ ழுந்தகோன் இனிமரிப்ப தில்லையே
பொன்று மரணஞசிறை பூண்டாள்வ தில்லையே

தரைபவத்திற் கென்றொரு தரமரித்த னர்சுதன்
பரணவர்க்கு மகிமையாய்ப் பிடிபிழைத் திருக்கிறார்

நாதன்போற் பாவத்திற்கு நாமுமரிப் போமாகப்
பேதமின்றி யேசுவுக்குப் பிழைத்திருப் போமாக

கிறிஸ்தடக்கப் பட்டுமா கீர்த்தியோ டேயெழுந்து
முறைமரித்த வர்களில் முதற்பல னானாரே

மனுஷனாலு லகினில் மரணமுன் டானதால்
மனுஷனாலே யுயிரெழல் மகிமையாயுண்டானதே

ஆதத்தா லெல்லாரும் அறமரித்தல் போலவே
நாதானால் மெய்யாக நாமுயி ரடைகுவோம்

ஆதிபி தாகுமாரன் ஆவிதிரி யேகர்க்கே
மாதிரி காலங்களாய் மாமகிமை யாகவே


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com