பரிசுத்தாவி நீ வாரும்
Parisuthaavi Nee Vaarum
பரிசுத்தாவி நீ வாரும் திடப்
படுத்தல் பெறுவோர்க் கருள் தாரும்-இன்று
அருளினைப் பெருக்கும் அக்கினி மயமே
ஆவியின் நற்கனி நல்குமா தூயமே
செயல்குண வசனத் தீதுகள் போக
திருச்சபை யதிலிவர் பூரணராக
ஜெயமொடு பேயை எதிர்த்துக் கொண்டேக
ஜெபதப தியானஞ் செய்வதற்காக
நற்கருணை தனை நலமுடன் வாங்க
நாளரு மேனியாய் ஆவியி லோங்க
சற்குணராய் இவர் சபையைக் கை தாங்க
சகல தீதான பேதங்களும் நீங்க
அஞ்ஞானங்க ளோடிவர் சமர் புரிய
அருண்மறை யதினாழங் களையறிய
நெஞ்சினில் அன்பு கொழுந்துவிட் டெரிய
நின்னடியாரிவ ரென்பது தெரிய
பத்தியுந் தாழ்மையுமா யிவர் உய்ய
பரிசுத்தமான ஜீவியஞ் செய்ய
நித்தமுங் கிருபையின் கனி கொய்ய
நிலைவரமாய் இவராவியில் துய்ய
தினமறை யோதி ஜெபித்து மன்றாட
திருச்சபை யதின்ஐக் கியத்தினிற் கூட
உணர்வொடு தொழுது கீதங்கள் பாட
உள்ளத் திருந்து ஜீவாறு களோட