போசனந்தானு முண்டோ திருராப்
Posanandhanu Mundo Thirurap
போசனந்தானு முண்டோ திருராப்
போசனம் போலுலகில்
ராசரும் வையக நீசரும் அம்பரன்
நேசரும் யேசுவின் தாசரும் உண்டிடப்
கர்த்தன் மரணத்தின் சாசன போசனம்
கன்மி கட்கானமெய் நேசத்தின் போசனம்
பத்தரை யன்றாய் இணைத்திடும் போசனம்
பஞ்சகாத்தும் கிடைத்திடும் போசனம்
பூர்வ ஏற்பாட்டோர்கள் காணாத போசனம்
பொன் வானதூதரும் உண்ணாத போசனம்
ஓர் காலமும் குறைவாகாத போசனம்
ஒப்பில்லான் மாமிசம் ரத்தமாம் போசனம்
பஸ்காப் பலியின் பொருள் என்னும் போசனம்
பாவி புசிக்கும் சமாதான போசனம்
நிஷ்கார நிந்தைப் பவம்போக்கும் போசனம்
நின்மலன் தந்திடும் அற்புத போசனம்
மாமலைப் பீடப் பலியான போசனம்
மானிட ஞானத்துக் கெட்டாத போசனம்
ஆமென்று நாங்கள் போதித்திடும் போசனம்
அத்தனார் மெய்மொழியாலான போசனம்
மாமிசம் அப்பத் தோடே வரும் போசனம்
வல்லன் ரத்தன் ரசத்தோடுறும் போசனம்
பூமியில் மோட்சம் கொணர்ந்திடும் போசனம்
பொய்க் கிறிஸ்தோர்களுக் காக்கினைப் போசனம்
ஒப்பனை யென்னக் கூடாதமெய்ப் போசனம்
ஒன்று மற்றொன்றாக மாறாத போசனம்
தப்பற நாங்கள் புசித்திடும் போசனம்
சந்தோஷப் பாவப் பொறுப்பீயும் போசனம்
செத்தும் உயிரோ டெழுப்பிடும் போசனம்
சீவனோ டென்றென்று வாழ்விக்கும் போசனம்
நித்தமுண்டாலும் சலிக்காத போசனம்
நேச சஞ்சீவி யெனுந்திருப் போசனம்