Rajavaga Pirintha Yesu ராஜாவாக பிறந்த இயேசு
ராஜாவாக பிறந்த இயேசு
என் உள்ளத்திலே தங்கியே விட்டார்
அல்லேலுயா சொல்லிப் பாடுவேன்
ஆடிப்பாடி நன்றி சொல்லுவேன்
துயரத்தைப் போக்க இயேசு பிறந்தார்
பாவத்தை மன்னிக்க இயேசு பிறந்தார்
எனக்கொரு வாழ்வுதர
சமாதானம் அருளிச் செய்ய
எனக்காக இயேசு பிறந்தார்
தாவீதின் வேராக இயேசு பிறந்தார்
ஈசாயின் மரமாய் இயேசு பிறந்தார்
என்னை என்றும் வாழ வைக்க
கிருபையால் நிலைநிற்க
எனக்காக இயேசு பிறந்தார்