• waytochurch.com logo
Song # 15558

இரத்தத்தினாலே கழுவப்பட்டேன்

Rathathinaalae kazhuvappatten


இரத்தத்தினாலே கழுவப்பட்டேன்
பரிசுத்தமாக்கப்பட்டேன்
மீட்கப்பட்டேன் திரு இரத்தத்தால்
அலகையின் பிடியினின்று - நான்

இரத்தம் ஜெயம் , இரத்தம் ஜெயம்
இயேசுகிறிஸ்துவின் இரத்தம் ஜெயம்

படைத்தவரே என்னை ஏற்றுக் கொண்டார்
சிந்தப்பட்ட திரு இரத்தத்தால்
பாவம் செய்யாத ஒரு மகனைப்போல
பார்க்கின்றார் பரமபிதா

என் சார்பில் தேவனை நோக்கி
தொடர்ந்து கூப்பிடும் இரத்தம்
அருள் நிறைந்த இறை அரியணையை
துணிவுடன் அணுகிச் செல்வோம்

போர்க்கவசம் என் தலைக்கவசம்
இயேசுவின் திரு இரத்தம்
தீய ஆவி(யும்) அணுகாது
தீங்கிழைக்க முடியாது-எந்த

சுத்திகரிக்கும் தூய்மையாக்கும்
வாழ்நாளெல்லாம் தினமும்
நன்மையான காரியங்கள்
நமக்காய் பரிந்து பேசும்

சாவுக்கேதுவான கிரியை நீக்கி
பரிசுத்தமாக்கும் இரத்தம்
ஜீவனுள்ள தேவனுக்கு
ஊழியம் செய்வதற்கு


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com