• waytochurch.com logo
Song # 15560

இராஜாதி ராஜாவைக்

Rajadhi Rajavai Kondaduvome



இராஜாதி ராஜாவைக்
கொண்டாடுவோம்
நாள்தோறும் துதிபாடி
கொண்டாடுவோம்

1. வந்தாரே தேடி வந்தாரே
தன் ஜீவன் எனக்காய் தந்தாரே
என்னை வாழ வைக்கும் தெய்வம்
தான் இயேசு
என்னை வழிநடத்தும்
தீபம் தான் இயேசு - அந்த

2. கலக்கம் இல்லை எனக்கு கவலை இல்லை
கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறார்
என்னைப் பசும்புல்
மேய்ச்சலுக்கு நடத்துவார்
நான் பசியாற உணவு ஊட்டி
மகிழுவார் - அந்த

3. வென்றாரே சாத்தானை வென்றாரே
வல்லமைகள் அனைத்தையும் உரிந்தாரே
அந்த சாத்தான் மேலே
அதிகாரம் தந்தாரே
என் இயேசு நாமம் சொல்லிச்
சொல்லி முறியடிப்பேன் - நம்

4. கரங்களிலே என்னைப்
பொறித்து உள்ளார்
கண்முன்னே தினம்
என்னை நிறுத்தியுள்ளார்
ஏற்ற காலத்திலே உயர்த்துவார் - அவர்
கரங்களுக்குள் அடங்கி நான்
காத்திருப்பேன்

5. முடிவில்லாத தம் மகிமையிலே
பங்கு பெற என்னைத்
தெரிந்துக் கொண்டார்
என்னைச் சீர்படுத்தி
ஸ்திரப்படுத்தி நடத்துவார்
பெலப்படுத்தி நிலைநிறுத்தி மகிழுவார்




                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com