அனந்த துதி ஒலி கேட்கும்
Aanantha Thuthi Oli ketkum
சிறை வாழ்வு மறையும் சீர்வாழ்வு மலரும்
சீயோனின் மகிமை திரும்பும்
அனந்த துதி ஒலி கேட்கும்
ஆடல் பாடல் சத்தமும் கேட்கும்
ஆகாய விண்மீனாய் அவர் ஜனம் பெருகும்
ஆண்டவர் வாக்குப் பலிக்கும் ...ஆ... (ஆகாய) - ஆனந்த
1) மகிமைப்படுத்துவேன் என்றாரே
மகிமைபனின் பாசம் பெரிதே
மங்காத புகழுடன் வாழ்வோம்
மாட்சிப்பெறறு உயர்ந்திடுவோமே
குறுகிட மாட்டோம் குன்றிட மாட்டோம்
தடையில்லா தேவனின் வாக்கு ... ஆ... (குறுகிட) - ஆனந்த
2) யாக்கோபு நடுங்கிடுவானோ
யாக்கோபின் தேவன் துணையே
அமரிக்கை வாழ்வை அழைப்போம்
ஆண்டவர் மார்பில் சுகிப்போம்
பதறாத வாழ்வும் சிதறாத மனமும்
பரிசாக தேவன் அருள்வார் ... (ஆ) ... (பதறாத) - ஆனந்த