Sila nerangalil sila nerangalil சில நேரங்களில் சில நேரங்களில்
சில நேரங்களில் சில நேரங்களில்
என்னால் முடியாமல் துடிக்கிறேன்
நான் யார் அறியாமல் தவிக்கிறேன்
இரவில் அந்த வேளையில்
எழுந்தேன் நான் எழுந்தேன்
அறையில் ஒரு மூலையில்
அழுதேன் நான் அழுதேன்
துக்கத்தின் மிகுதியால்
ஜெபிக்க முடியல
அழுது தீர்த்துட்டேன்
கண்களில் நீர் இல்ல
உங்களை நம்பி வாழுறேன்
வேற யாரும் எனக்கில்ல
வசனம் அத நாடுறேன்
வேற ஏதும் துணைக்கில்ல
என்னோட காயமெல்லாம்
நீங்கதான் கட்டிடணும்
உம்மோட பார்வையெல்லாம்
என்மேல பட்டிடணும்
உந்தன் தேவன் நானே உன்னை தாங்கிடுவேன்
நானே உனக்கென்றும் ஆறுதல்
என் வார்த்தை அது உன் தேறுதல்