• waytochurch.com logo
Song # 15573

சுத்த இருதயத்தை சிருஷ்டியுமே

Suththa irudhayathai sirushtiyume


சுத்த இருதயத்தை சிருஷ்டியுமே
செத்த மனிதனை உயிர்ப்பியுமே
சிக்குண்டு தவிக்கிறேன் உலகினிலே
சீக்கிரம் வந்து என்னை தப்புவியுமே

பாவங்கள் நீங்க என்னை சுத்திகரியும்
அக்கிரமம் நீங்க என்னை கழுவிவிடும்
மீறுதல் அறிந்தேன் பாவங்கள் தெரிந்தேன்
கண்முன்னே பொல்லாங்கினை நடத்திவிட்டேன்
உம்முன்னே பாவங்களை உடுத்திவிட்டேன்

உள்ளத்தில் உண்மைதனை விரும்புகிறீர்
ஞானத்தை என்னிடத்தில் விளம்புகிறீர்
சுத்திகரித்திடும் குற்றம் எரித்திடும்
வெண்மழைபோல என்னை வெண்மையாக்கிடும்
கன்மலை நீரென்னை நல்தன்மையாக்கிடும்

நல் இதயத்தை என்னில் சிருஷ்டியுமே
உள் இதயத்தில் ஆவி புதுப்பியுமே
பாவியை தள்ளாதீர் ஆவியை அள்ளாதீர்
ரட்சிப்பின் சந்தோஷத்தை எனக்கு தாரீர்
உற்சாக ஆவி என்னை தாங்கச் செய்குவீர்

வெட்டுண்ட ஆவிதனை ஏற்றுக்கொள்கிறீர்
கட்டுண்ட பாவிதனை தேற்றிச்செல்கிறீர்
பாவப்பழிகளை நீக்கிடும் ஐயனே
பொய்யனை மாற்றும் பரலோக மெய்யனே
கெம்பீரித்தும்மை பாடி போற்றிடுவேனே


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com