• waytochurch.com logo
Song # 15576

சமாதானம் வேண்டுமா ஜெபம் செய்வோம்

Samaadhaanam vendumaa jebam seivom


சமாதானம் வேண்டுமா ஜெபம் செய்வோம்
சங்கடங்கள் நீங்கவே ஜெபம் செய்திடுவோம்
நிலை மாற வேண்டுமா ஜெபம் செய்வோம்
மனம் மாற வேண்டுமா ஜெபம் செய்திடுவோம்

முழங்காலில் நாம் நின்றுவிட்டால்
முடியாது என்று ஒன்றுமில்லை
வாக்குதத்தம் நாம் பற்றிக்கொண்டால்
வாழ்வில் இனி ஒரு தோல்வியில்லை

வேதனைகள் நீங்கவே ஜெபம் செய்வோம்
வெற்றி வாழ்க்கை வாழவே ஜெபம் செய்திடுவோம்

எலியாவும் ஒரு மனிதன்தான்
ஜெபித்திட மழை மறைந்ததே
மீண்டும் அவன் வந்து ஜெபிக்கையில்
நின்ற மழை அன்று பொழிந்ததே

விசுவாசத்தோடு நாம் ஜெபம் செய்வோம்
கருத்தாக யாவரும் ஜெபம் செய்திடுவோம்

வானவரே விண்ணப்பம் செய்யும்போது
மானிடர் நாம் ஜெபிக்க தயங்கலாகுமோ
கற்றுத் தந்தார் நாமும் ஜெபித்திட - அவர்
சித்தப்படி என்றும் நடந்திட

மனத் தாழ்மையோடு நாம் ஜெபம் செய்வோம்
உயிர் உள்ள நாள் வரை ஜெபம் செய்திடுவோம்.


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com