• waytochurch.com logo
Song # 15584

சத்திய வேதத்தைத் தினம் தியானி

Sathiya Vedathai Dinam Thiyan


சத்திய வேதத்தைத் தினம் தியானி
சகல போர்க்கும் அதபிமானி
உத்தம ஜீவிய வழிகாட்டும்
உயர்வானுலகில் உனைக்கூட்டும்

வாலிபர் தமக்கூண் அதுவாகும்
வயோதியர்க்கும் அதுணவாகும்
பாலகர்க்கினிய பாலும் அதாம்
படிமீ தாத்மபசி தணிக்கும்

சத்துருப் பேயுடன் அமர்புரியும்
தருணம் அதுநல் ஆயுதமாம்
புத்திரர் மித்திரரோடு மகிழும்
பொழுதும் அதுநல் உறவாகும்

புலைமேவிய மானிடரிதயம்
புனிதம் பெறுதற்கதுமருந்தாம்
நிலையா நரர்வாணாள் நிலைக்க
நேயகாய கற்பம் அதாம்

கதியின் வழி காணாதவர்கள்
கண்ணுக்கரிய கலிக்கம் அது
புதிய எருசாலேம்பதிக்குப்
போகும் பயணத்துணையும் அது


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com