• waytochurch.com logo
Song # 15586

சீர்மிகு வான்புவி தேவா தோத்ரம்

Seermigu Vaan Puvi Deva


சீர்மிகு வான்புவி தேவா தோத்ரம்
சிருஷ்டிப்பு யாவையும் படைத்தாய், தோத்ரம்
ஏர்குணனே தோத்ரம் அடியர்க்கு
இரங்கிடுவாய் தோத்ரம் மா நேசா

நேர்மிகு அருள் திரு அம்பா தோத்ரம்
நித்தமு முமக் கடியார்களின் தோத்ரம்
ஆர் மணனே தோத்ரம் உனது
அன்பினுக்கே தோத்ரம் மா நேசா

ஜீவன் சுகம் பெலன் யாவுக்கும் தோத்ரம்
தினம் தினம் அருள் நன்மைக்காவும் தோத்ரம்
ஆவலுடன் தோத்ரம் உனது
அன்பினுக்கே தோத்ரம் மா நேசா

ஆத்தும நன்மைகட்காகவும் தோதரம்
அதிசய நடத்துதற்காகவும் தோத்ரம்
சாற்றுகிறோம் தோத்ரம் உனது
தகுமன்புக்கே தோத்ரம் மா நேசா

மாறாப் பூரண நேசா தோத்ரம்
மகிழொடு ஜெபமொழி மாலையின் தோதரம்
தாராய்துணை தோத்ரம் இந்த
தருணமே கொடு தோத்ரம் மா நேசா


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com