• waytochurch.com logo
Song # 15601

சிங்கார மாளிகையில்

Singara Maligaiyil Jeya


சிங்கார மாளிகையில்
ஜெய கீதங்கள் பாடிடுவோம்
சீயோன் மணவாளனுடன்

ஆனந்தம் பாடி அன்பரைச் சேர்ந்து
ஆறுதலடைந்திடுவோம் அங்கே
அலங்கார மகிமையின் கிரீடங்கள் சூடி
அன்பரில் மகிழ்ந்திடுவோம்

துயரப்பட்டவர் துதித்துப்பாடுவார்
துதியின் உடையுடனே அங்கே
உயரமாம் சீயோன் உன்னதரோடு
களித்து கவி பாடுவோம்

முள்முடி நமக்காய் அணிந்த மெய் இயேசுவின்
திருமுகம் கண்டிடுவோம் அங்கே
முத்திரையிட்ட சுத்தர்கள் வெள்ளங்கி
தரித்தோராய் துதித்திடுவார்

பூமியின் அரசைப் புதுப்பாட்டாய் பாடி
புன்னகை பூத்திடுவோம் புது
எண்ணெயால் அபிஷேகம் பண்ணப்பட்டோராய்
மண்ணாசை ஒழித்திடுவோம்

அவருரைத்த அடையாளங்களெல்லாம்
தவறாமல் நடக்கின்றதே அவர்
வரும் வேளை அறியாதிருப்பதால்
எப்போதும் ஆயத்தமாயிருப்போம்


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No
  • Song youtube video link :
    Copy sharelink from youtube and paste it here

© 2025 Waytochurch.com