• waytochurch.com logo
Song # 15605

சுந்தரப் பரம தேவமைந்தன்

Sundara Parama Deva


சுந்தரப் பரம தேவமைந்தன் ஏசுக் கிறிஸ்துவுக்குத்
தோத்திரம் புகழ்ச்சினித்திய கீர்த்தனம் என்றும்

அந்தரம் புவியும் தந்து சொந்த ஜீவனையும் ஈந்து
ஆற்றினார் நமை ஒன்றாய்க் கூட்டினார் அருள் முடி
சூட்டினார் கிருபையால் தேற்றினாரே துதி

பாதகப் பசாசால் வந்த தீதெனும் பவத்தால் நொந்த
பாவிகளான நமை உசாவி மீட்டாரே
வேத பிதாவுக் குகந்த ஜாதியாகக் கூட்டவந்த
மேசியாவைப் பற்றும் விசு வாச வீட்டாரே
கோதணுகா நீதிபரன் பாதமதின் ஆதரவில்
கூடுங்கள் பவத்துயர்
போடுங்கள் ஜெயத்தைக் கொண்
டாடுங்கள் துதிசொல்லிப் பாடுங்கள் பாடுங்கள் என்றும்

விண்ணிலுள்ள ஜோதிகளும் எண்ணடங்காச் சேனைகளும்
விந்தையாய்க் கிறிஸ்துவைப் பணிந்து போற்றவே
மண்ணிலுள்ள ஜாதிகளும் நண்ணும் பல பொருள்களும்
வல்லபரன் எனத் துதி சொல்லி ஏத்தவே
அண்ணலாம் பிதாவுக் கொரே புண்ணியகுமாரனைக் கொண்
டாடிட அவர் பதம்
தேடிட வெகு திரள்
கூடிடத் துதி புகழ் பாடிடப் பாடிட என்றும்

சத்தியத் தரசர்களும் வித்தகப் பெரியார்களும்
சங்கத்தோர் களுங்கிருபை தங்கி வாழவே
எத்திசை மனிதர்களும் பக்தர் விசுவாசிகளும்
ஏக மிகுஞ் சமாதான மாக வாழவே
உத்தம போதகர்களும் சத்யதிருச் சபைகளும்
உயர்ந்து வாழ தீயோன்
பயந்து தாழ மிக
நயந்து கிறிஸ்வுக்கு ஜெயந்தான் நயந்தான் என்றும்


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No
  • Song youtube video link :
    Copy sharelink from youtube and paste it here

© 2025 Waytochurch.com