சத்துரு விழுந்தானே
Sathuru Vizhunthaney
சத்துரு விழுந்தானே
உன் பாதத்தின் கீழே
புது எண்ணெயால் அபிஷேகம்
உன் பாத்திரம் நிரம்பும்
பெரும் பந்தியின் நடுவிலே
என் தலையை உயர்த்துவார்
நீதியின் சால்வையாலே
உன்னை மூடுவார்
நீ உயருவாய் நீ படருவாய்
உன் தேசம் வாழுமே
நீ ஓங்கு வளருவாய்
நீ பூத்து குலுங்குவாய்
நீ பூமியை நிரப்புவாய்
யுத்தங்கள் நடப்பிக்கும்
சர்வ வல்ல தேவன்
கூர்மையான பட்டயமாய்
உன்னை என்றும் மாற்றுவார்
கன்மலையின் வெடிப்பிலே
உன்னை மூடுவார்
பலவானின் கையிலே உள்ள
அம்பாய் மாற்றுவார்-நீ மலையின்
மேல் உள்ள பட்டணமாய்-இனி
மறைவது இல்லையே நீ உலகத்தின்
வெளிச்சமே நீ பூமியின் சாட்சியே