சர்வ சிருஷ்டிக்கும் எஜமானார் நீரே
Sarva Srishtikum Yejamaanar
சர்வ சிருஷ்டிக்கும் எஜமானார் நீரே
உங்க வார்த்தைக்கு ஈடு இல்லயே
சத்தியம் ஜீவன் அவரே
நித்தியம் நித்தியம் அவரே
சத்திய தேவனே நித்திய ராஜனே
என்னோடு வருபவரும் அவரே
அவரே (3) இன்றும் என்றும் அவரே
ஒரு போதும் கைவிடாமல்
என்னையும் காத்தவரே - ஒருநாளும்
விலகிடாமல் என்னையும் கண்டாரே
எத்தனை நன்மைகள் செய்தார்
எத்தனை இன்பங்கள் தந்தார்
தந்தாரே (3) சந்தோஷம்
அள்ளியே தந்தாரே
ஒரே ஒரு வார்த்தையாலே
கடலையும் அதட்டினாரே - ஒரே ஒரு
வார்த்தையாலே மரணத்தை வென்றாரே
ஒரே ஒரு வார்த்தை சொன்னால் போதுமே
இன்றைக்கே உந்தன் வாழ்க்கை மாறுமே
மாறுமே (3) உந்தன் வாழ்வே மாறுமே