சுகம் பெலன் எனக்குள்ளே
Sugam Belan Enakkullae
சுகம் பெலன் எனக்குள்ளே பாய்ந்து செல்லுதே
வல்லமை நதியாய் பரவி பாயுதே
இரத்தக்குழாய்கள் கண்கள் செவி வாய்
தமனி எங்கும் பாய்கின்றதே
உம் வல்லமையால் சுகமானேன்
உம் வார்த்தையால் சுகமானேன்
உம் தழும்புகளால் சுகமானேன்
உம் தயவினால் சுகமானேன் - சுகம் பெலன்
இயேசையா இரட்சகரே
சுகம் தரும் என் தெய்வமே -உன் வல்லமை
முதுகுத்தண்டு இதயம் மூளை நரம்பு இரத்தம்
வல்லமை பாய்கின்றதே
குடல் தோல் கனையம் இரைப்பை வயிறு
சதை எங்கும் பாய்கின்றதே -இயேசையா
முட்டு ஈரல் மூட்டு கைகால் திசுக்கள்
வல்லமை பாய்கின்றதே
எலும்பு நரம்புகள் சிறுநீரகங்கள்
தலையெங்கும் பாய்கின்றதே
கர்ப்பப்பை கட்டி காயங்கள் புண்கள்
வல்லமை பாய்கின்றதே
முடக்குவாதங்கள் நுரையீரல்கள்
சுவாசம் எங்கும் பாய்கின்றதே
புதிய படைப்பு நானே தேவபுத்திரன் ஆனேன்
இயேசுவே என் குடும்ப மருத்துவர் -அவர்
நாமத்தினால் இரத்தத்தினால் சுகமானேன்