சூரியன் மறந்து அந்தகாரம்
Suriyan Maranthu Anthakaram
சூரியன் மறந்து அந்தகாரம் சூழ்ந்தது
சோர்ந்த என்தேகமும் அயர்ந்துமே
இளைப்பாறப்போகுது
தூயா கிருபைகூர்ந்து காருமையா
பகல் முழுவதும் பட்சமாய் என்னை பாதுகாத்தீரே
சகலதீமையுமகல வைத்தருள் நலமுந்தந்தீரே
சுவாமி உன்றன் பாதம் பணிகிறேன்
பாதகம் மிக புரிந்தேன் பரம நாயகா
பாவி நானிந்த நாளிலும் பல தீவினைசெய் தேனையா
கோபமின்றி என்பவம் பொறுத்திடுவாய்
ராவில் வரும் மோசமொன்றும் என்னைச் நேராமல்
பேயின் சர்ப்பனை தீய சொப்பனம் மனதில் நேராமல்
நேயா நின் நல்தூதர் கவால் தா
ஆத்துமம் சரீரம் எனக்கான யாவையும்
அப்பனுன் கையிலொப்புவித்து நான் அமர்ந்து தூங்குவேன்
ஐயனே உன் பொன்னடி சரணம்