• waytochurch.com logo
Song # 15631

சேனைகளின் கர்த்தரே நின்

Senaigalin Karthare Nin


சேனைகளின் கர்த்தரே நின்
திருவிலம் அளவற இனிதினிதே

வானவானங்கள் கொள்ளாத
ஈன ஆன்மாவைத் தள்ளாத

திருவருளிலமே கணுறும் உணரும்
தெருளம்பகமே இனிதுறும் நிசமிது

ஈண்டடியார் கேட்டிடும் நின்வசனமினிதே இனிதே
இகபர நலமொளிர் இதமிகு பெயருள
எமதரசெனும் நய

புவியோர் பதிவான் புகநிதியே
புனருயி ருறுமுழுக் கருளினிதே
புதுவிடமே,புகுமணமே,புதுமதியே
புரிவொடு இனிதருள்

பேயடே புவி பேதை மாமிசம்
பேணிடாதடியாருனைப்
பேறு தந்தவனே யெனச்சொலி
பேணிடத்துணை ஈவையே
பேசருமுன்னந்தம் பேதைகளின் சொந்தம் பேதமிலானந்தம்
பிசகொழியே திடமளியே
பெருமலையினிலரு முயிர்தரும்

ஆலய மது நிறைவாக
அவைக் குறை வொழிந்தேக
அவரவருனதில மெனமனவிடர்சாக
அருளும் பொருளுந் தெருளும் செறிந்திடும்
ஆலய பர னேச
ஆசுக மது வீச
ஆரண மொழி பேச
ஆ புது எருசலையாம்
ஆலய மொரு நிலையாம்
அது நிக ரெது


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com