துயரத்தில் கூப்பிட்டேன்
Thuyarathil Koopitaen
துயரத்தில் கூப்பிட்டேன்
உதவிக்காய் கதறினேன்
அழுகுரல் கேட்டிரையா
குனிந்து தூக்கினீர்
பெரியவனாக்கினீர்
உமது காருண்யத்தால்
குனிந்து தூக்கினீரே
பெரியவனாக்கினீரே
உமது காருண்யத்தால்
(குனிந்து தூக்கினீரே)
எனது விளக்கு எரியச் செய்தீர்
இரவை பகலாக்கினீர்
எரிந்து கொண்டிருப்பேன்
எப்போதும் உமக்காய்
என் ஜீவன் பிரியும் வரை
எரிந்து கொண்டேயிருப்பேன்
எப்போதுமே உமக்காய்
என் ஜீவன் பிரியும் வரை
(எரிந்து கொண்டேயிருப்பேன்)
நான் நம்பும் கேடகம்
விடுவிக்கும் தெய்வம்
நீர்தான் நீர்தானய்யா
தூயவர் தூயவர்
துதிக்குப் பாத்திரர்
ஆறுதல் நீர்தானய்யா
தூயவர் தூயவரே
துதிக்குப் பாத்திரரே
ஆறுதல் நீர்தானய்யா
(தூயவர் தூயவரே)
சேனைக்குள் பாய்ந்தேன்
உந்தன் தயவாலே
மதிலைத் தாண்டிடுவேன்
புகழ்ந்து பாடுவேன்
உம்மையே உயர்த்துவேன்
உயிர் வாழும் நாட்களெல்லாம்
புகழ்ந்து பாடிடுவேன்
உம்மையே உயர்த்துவேன்
உயிர் வாழும் நாட்களெல்லாம்
(புகழ்ந்து பாடிடுவேன்)