திருப்தியாக்கி நடத்திடுவார்
Thirupthiyakki Nadathi Duvar
திருப்தியாக்கி நடத்திடுவார்
தேவைகளை சந்திப்பார்
மீதம் எடுக்க வைப்பார்
பிறருக்குக் கொடுக்க வைப்பார்
பாடிக் கொண்டாடுவோம்
கோடி நன்றி சொல்லுவோம்
ஜந்து அப்பங்களை,
அயிரமாய் பெருகச்செய்தார்
ஜயாயிரம் ஆண்களுக்கு
வயிராற உணவளித்தார்
பொன்னோடும் பொருளோடும்,
புறப்படச் செய்தாரே
பலவீனம் இல்லாமலே
பாதுகாத்து நடத்தினாரே-ஒரு
காடைகள் வரவழைத்தார்
மன்னாவால் உணவளித்தார்
கற்பாறையை பிளந்து,
தண்ணீர்கள் ஓடச்செய்தார்
நீடிய ஆயுள் தந்து
நிறைவோடு நடத்திடுவார்
முதிர் வயதானாலும்,
பசுமையாய் வாழச் செய்வார்