தடுக்கி விழுந்தோரை தாங்குகிறீர்
Thatukki Vizunthorai
தடுக்கி விழுந்தோரை தாங்குகிறீர்
தாழ்த்தப்பட்டோரை தூக்குகிறீர்
தகப்பனே தந்தையே
உமக்குத்தான் ஆராதனை
போற்றுதலுக்குரிய பெரியவரே
தூயவர் தூயவரே
எல்லாருக்கும் நன்மை செய்பவரே
இரக்கம் மிகுந்தவரே
உன் நாமம் உயரணுமே
அது உலகெங்கும் பரவணுமே
உம்மை நோக்கி மன்றாடும், யாவருக்கும்
அருகில் இருக்கின்றீர்
கூப்பிடுதல் கேட்டு, குறை நீக்குவீர்
விருப்பம் நிறைவேற்றுவீர் - உன்
உயிரினங்கள் எல்லாம், உம்மைத்தானே
நோக்கிப் பார்க்கின்றன
ஏற்றவேளையில் உணவளித்து
ஏக்கமெல்லாம் நிறைவேற்றுவீர்
அன்பு கூறும் எங்களை அரவனைத்து
அதிசயம் செய்கின்றீர்
பற்றிக்கொண்ட யாவரையும் பாதுகாத்து
பரலோகம் கூட்டிச் செல்வீர்