• waytochurch.com logo
Song # 15651

தோத்திரம் புகழ் கீர்த்தனம்

Thothiram Pugal Kirththanam


தோத்திரம் புகழ் கீர்த்தனம் ஜெய சோபனம் உமக்கையா துதி
சொல்லவும் தீதை வெல்லவும் கிருபை சூட்டுவீர் கிறிஸ்தையா

கோத்திரவழி சிறந்த யூத நல் கொற்றவா தேவபாலா
மனுவேலா மறைநூலா செங்கோலனு கூலா

என் தனை மீட்கநீர் இந்த உலகினில் வந்து பிறந்தீர் நன் மனுவாய் மறை
ஏற்றித் தினம் எனை ஆற்றிநன் மொழியால் தேற்றினீர் முற்றிலும் தனுவாய்
நிந்தை அடைந்து மெய்ச் சொந்த உதிரத்தைச் சிந்தினீர்
எத்தனை பரிவாய் தேவ
நீதியும் வினங்கச் செய்து பவமனு ஜாதிக்கிரங்கி நற்குருவாய்
நின்றீரே நடுவராய் நின்றீரே தீதைஎலாம்
கொன்றீரே பசாசையும் வென்றீரே ஜெயம் கொண்டீரே நித்ய

சுத்த சுவிசேஷ சத்தியமொழியை விஸ்தரிக்க வரந்தாரும் நேய
சூரிய கிரண வீரியத்தால் எனக் காரோக்கியம் அருள்கூரும்
நித்தம் எனைத் தேவ பத்தியில் நடத்திச் சித்தம் இரங்கிக் கண்பாரும் கரம்
நில்லும் ஐயா என் பக்கத்தில் நில்லும் ஐயா தினம் நலம்
சொல்லும் ஐயா தீயோன் தனை வெல்லும் ஐயா தீமைக்
கொல்லும் ஐயா துய்யா

நித்தியஜீவனைப் பெற்றும் மோடிக்கச் சுத்தி கரித்தென்ன
ஆளும் பல
நிந்தையோ டென் சுய கந்தை அகற்றி மெய் விந்தைக் கிரு
பையால் சூழும்
சத்திய வசனவித்தால் எனை ஜெனிப்பித் தென் மனதினில்
வாழும் பதஞ்
சாற்றித் தினம் உவமைப் போற்றிப் பணிந்தித் தேற்றி எனை அரசாளும்
சற்குருவே கிறிஸ்தெனும் சற்குருவே ஜீவன்உள
சொற்குருவே நித்தியானந்த நற்குருவே பரப் பொற்குருவே தேவே


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No
  • Song youtube video link :
    Copy sharelink from youtube and paste it here

© 2025 Waytochurch.com