Thuthippen Ummai Thuthipen துதிப்பேன் உம்மைத் துதிப்பேன்
துதிப்பேன் உம்மைத் துதிப்பேன்
மகிமை செலுத்தித் துதிப்பேன்
துதியும் கனமும் எல்லாம்
உமக்கே தேவா உமக்கே
கிருபைகள் என்னில் பெருகச்
செய்தீரே ஸ்தோத்திரம்
உம் கரங்களால் என்னை
காத்து கொண்டீரே ஸ்தோத்திரம்
சோதனை என்னை சூழ்ந்த
போதும் நீர் காத்தீர்
வேதனை என்னில் வந்த
போதும் துணை நின்றீர்
கண்ணீர் என்னில் வந்த
போதும் நீர் துடைத்தீர்- என்
ஏக்கங்கள் எல்லாம் நீரே தீர்த்தீர்