Thuthi Sei Nee Maname துதி செய் நீ மனமே
துதி செய் நீ மனமே துதிகளைப் படியே
துதி பெற பாத்திரராம் தூயவர் இயேசுவை
பரலோக மகிமை துறந்தவரே
பாவ இவ்வுலகில் வந்தவரே
பரிசுத்தராகவே வாழ்ந்தவரே
பாவியை மீட்கவே வந்தவரே
கருணையின் உள்ளம் படைத்தவரே
குற்றங்கள் யாவையும் சுமந்தவரே
குருசினில் எனக்காய் மரித்தவரே
குருதியை சிந்தியே மீட்டவரே
இயேசுவையன்றி வேறொருவர்
காசினில் உண்டோ சொல் மனமே
நேசரின் அன்பை என்றும் உணர்ந்து
தாசரும் அவர் பாதத்தில் விழுந்து
மானிடர் எல்லாரும் விட்டோடிடினும்
மாசற்ற தேவன் நம்மோடிருப்பார்
ஆர்ப்பரித்தே என்றுமே மகிழ்வேன்
ஆண்டாண்டு காலம் நம்மை காப்பதால்
நேசரின் மார்பினில் சார்ந்திடுவேன்
நேசத்தால் நம்மை நிரப்பிடுவார்
நாசம் என்றும் நம்மை அணுகாமலே
ஆதரித்து என்றும் காத்திடுவார்
நேசரின் வருகை நெருங்கிடுதே
நாச லோகை விட்டு சென்றிடுவேன்
எக்காள சத்தம் தொனித்திடுமே
மத்திய ஆகாயத்தை சேருவோம்