• waytochurch.com logo
Song # 15673

தூங்காமல் ஜெபிக்கும் வரம் தாங்கப்பா

Thoongamal Jebikkum


தூங்காமல் ஜெபிக்கும் வரம் தாங்கப்பா
விழித்திருந்து ஜெபிக்கும்
வரம் தாங்கப்பா

தூங்கினால் எதிரி களை விதைப்பான்
ஜெபம் (ஜெபிக்க) மறந்தால்
எதிரி ஜெயம் எடுப்பான் - நான்

உடலை ஒடுக்கணும் உணவைக் குறைக்கணும்
பேச்சை நிறுத்தணும் பெலத்தில் வளரணும்

அன்னாளைப் போல கண்ணீரை வடிக்கணும்
சாமுவேலைக் (எழுப்புதல்) காணும் வரை
இதயத்தை ஊற்றணும்

தானியேல் போல துதிக்கணும் ஜெபிக்கணும்
சிங்கங்களின் வாய்களைத் தினம் தினம் கட்டணும்

பவுலைப் போல சிறையிலே ஜெபிக்கணும்
கதவுகள் திறக்கணும் கட்டுகள் நீங்கணும்

மோசேயைப் போல மலை மேல் ஏறணும்
கரங்களை விரிக்கணும் கதறணும் தேசத்திற்காய்


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com