Thirupatham Seramal திருப் பாதம் சேராமல்
திருப் பாதம் சேராமல் இருப்பேனோ - நான்
தெய்வத்தைத் தேடாமல் பிழைப்பேனோ
அருட்கடலாம் ஈசன் அடியவர் பாசன்
உருக்கம் நிறைந்த விண்ணுயிரான நேசன்
ஆவியும் ஆத்மமும் ஆண்டவர் பங்கே
பூவில் அவரல்லால் புகலிடம் எங்கே
சத்திய மார்க்கமும் சகலமுமான
நித்திய ஜீவனும் நிமலனுமான
ஆறுதல் தேறுதல் அளித்திடும் சேயன்
கூறு மகிமையில் சேர்த்திடும் தூயன்
உலையில் மெழுகு போல் உருகுதென் நெஞ்சம்
மலையாதுன் திருவடி வணங்கினேன் தஞ்சம்