• waytochurch.com logo
Song # 15682

திக்கற்ற பிள்ளைகளுக்கு

Thikkatra Pillaikalukku


திக்கற்ற பிள்ளைகளுக்கு
சகாயர் நீரே அல்லவோ
எக்காலம் துணையவர்க்கு
நிற்பவரும் நீரே அல்லவோ

தனிமையான எனக்கு
சகாயர் நீரே அல்லவோ
ஆதரவற்ற எனக்கு
பக்க பலம் நீரே அல்லவோ

என்றைக்கும் மறைந்திருப்பீரோ
தூரத்தில் நின்று விடுவீரோ
பேதைகளை மறப்பீரோ
இயேசுவே மனமிரங்கும்

கர்த்தாவே எழுந்தருளும்
கை தூக்கி என்னை நிறுத்தும்
தீமைகள் என்னை சூழும் நேரம்
தூயவரே இரட்சியும்

தாய் என்னை மறந்தாலும்
நீர் என்னை மறப்பதில்லை
ஏழையின் ஜெபம் கேளும்
இயேசுவே மனமிரங்கும்


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com