• waytochurch.com logo
Song # 15686

தூய ஆவியானவர் இறங்கும்

Thooya Aaviyanavar Irangum


தூய ஆவியானவர் இறங்கும்
துரிதமாக வந்திறங்கும்
தடை யாவையும் தயவாய் நீக்கி இறங்கும்

பரிசுத்த பிதாவே இறங்கும்
இயேசுவின் மூலம் இறங்கும்

பல பல வருடங்கள் கழிந்தும்
பாரினில் இன்னும் இருளும்
அகலவில்லை எனவே நீரே இறங்கும்

ஜெபிப்பவர் பலரையும் எழுப்பும்
கிறிஸ்தவ சமூகத்தைத் திருத்தும்
துயபரனே தயவாய் வேகம் இறங்கும்

ஐந்து கண்டம் வாழும் மனிதர்
ஐந்து காயம் காண இறங்கும்
பாடுபட்ட நாதரே இன்றே இறங்கும்


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com