துயா துயா எம் இயேசு நாதா
Thuya Thuya Em Yesu Natha
துயா துயா எம் இயேசு நாதா
உம் நாமம் வாழ்த்துப் பெருக
துதிகளின் பாத்திரரே
துதிகள் உமக்குத் தந்தோம்
விண் துறந்தீர் மண்ணில் வந்தீர்
மா பெரும் அன்பல்லவோ
பாவம் சுமந்தீர் சாபமானீர்
பாதம் பணிந்திடுவோம்
சாவை வென்றீர் உயிர்த்தெழுந்தீர்
சாத்தானை தோற்கடித்தீர்
நித்திய வாழ்வை எமக்கு தந்தீர்
நித்தம் தொழுதிடுவோம்
மீண்டும் வருவீர் மண்ணில் நிற்பீர்
மார்போடு அணைத்திடுவீர்
மங்கா வாழ்வை எமக்குத் தருவீர்
மன்னா தொழுதிடுவோம்

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter