• waytochurch.com logo
Song # 15699

தேடி வந்த தெய்வம் இயேசு

Thedi Vantha Theivam


தேடி வந்த தெய்வம் இயேசு - என்னை
தேடி வந்த தெய்வம் இயேசு
வாடி நின்ற என்னையே வாழ வைத்திட
தேடி வந்த தெய்வம் இயேசு

பாவியாக இருந்த என் பாவம் போக்கிட்டார்
ஆவி பொழிந்து என்னையே தாவி அணைத்திட்டார்
அன்பே அவரின் பெயராம் அருளே அவரின் மொழியாம்
இருளே போக்கும் ஒளியாம்

இயேசு என்னில் இருக்கிறார் என்ன ஆனந்தம்
இருளும் புயலும் வரட்டுமே இதயம் கலங்குமோ
இறைவா இயேசு தேவா இதயம் மகிழ்ந்து பாடும்
என்றும் உம்மை நாடும்


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com