துதிதுதி பரன்றனையே
Thuthithuthi Paranranaiye
துதிதுதி பரன்றனையே - சுகிர்தமாக
துதிதுதி பரனையே துல்லிய நிர்மலனையே
கருதரு கரனையே கர்த்தாதி கர்த்தனையே
இருளிர் ராஜாங்கம்வென்று இரவி யாரணங் கொண்டு
மருள்வீண்பத்தியினின்று வல்லன் ஜெயித்தாரென்று
சுவிசேட எக்காளம் தொனித்தவுடன் வேதாளம்
பவிசை யிழந்த கோலம் பார் இந்த நற்காலம்
இத்தனை யாண்டாக இயேசுவை நன்றாகப்
பக்தர்கள் பணிவாகப் பருவாய்ப் போதித்தற்காக
நேயன் யேசுவைத்தேடி நிதிமவர் பதம் நாடித்
தூயன்றனைக் கொண்டாடிச் சுபகீதங்களைப் பாடி