• waytochurch.com logo
Song # 15717

தருணம் இதில் யேசுபரனே

Tharunam Ithil Yesuparane


தருணம் இதில் யேசுபரனே -உமதாவி
தரவேணுமே சுவாமி

அருள்தரும் சத்ய வல்ல அன்பின் ஜெபத்தின் ஆவி
அபிஷேகம் பெறுமுன்றன் அடியர்மேல் அமர்ந்திட

வித்தை ஞானம் அறிவு வேத சத்தியங்களில்
மிக்க உயர்ந்து தேர்ந்து விண்ணொளி இவர் வீசச்
சத்யம் சகலத் துள்ளும் தாசர்களை நடத்தும்
சத்ய ஆவி இவர்மேல் சம்பூரணமாய்ப் பெய்ய

பாவத்தை வேரறுக்கும் ஆவியின் வாள்பிடித்துப்
பலமாகவே இவர் உலகினில் போர் செய்யச்
சாவுற்றோர்கலை நித்ய ஜீவனைப் பெறச் செய்யும்
மா வீரராய் விளங்க் வல்லாவியே இறங்க

ஆவியின் கனியென்னும் அன்பாதி குணங்களை
அனுதினமும் இவர் அணிகல மாயணிந்து
மேவும் திருமந்தையை மேய்த்து வளர்க்க நல்ல
மேய்ப்பரே அன்பின் ஆவி வாய்ப்பாய் இவரில் தங்க

ஏக்கம் ஆத்தும தாகம் இடைவிடாமல் அடைந்து
ஊக்கத்துடனே இவர் ஓயாமல் ஜெபித்திட
வாக்குக் கடங்கப் பெருமூச்சோடே எமக்காக
மன்றாடும் ஜெப ஆவி என்றென்ற்ம் நிரம்பிட

மாசுகளற உம்மில் வாசமாக நிலைத்து
மாபணிவாய் உந்தம் மகிமையை நிதம் தேடத்
தேசுறு அருள்நாதா தாசர் உள்ளத்தினின்று
ஜீவநதிகள் ஓடிச் செல்வம் பொழியச் செய்ய


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com