• waytochurch.com logo
Song # 15722

திராட்சை செடியே இயேசு ராஜா

Thiraatchai Sediyae Yesu Rajaa



திராட்சை செடியே இயேசு ராஜா
உம்மோடு இணைந்திருக்கும் கிளை நாங்கள்
உமக்காய் படருகின்ற கொடி நாங்கள்
திராட்சை செடியே இயேசு ராஜா

1. பசும்புல் மேய்ச்சலிலே
நடத்திச் செல்பவரே
பரிசுத்தமானவரே - ஐயா
உள்ளமே மகிழுதையா
உம்மோடு இருப்பதனால்
கள்ளம் நீங்குதையா - எனக்கு

2. குயவன் கையில் உள்ள களிமண் நாங்கள்
ஏந்தி வனைந்திடுமே ஐயா
சித்தம் போல் உருவாக்கும்
சுத்தமாய் உருமாற்றும்
நித்தம் உம் கரத்தில் - நாங்கள்

3. வார்த்தையில் நிலைத்திருந்து தினமும்
கனி கொடுக்கும் சீடர்கள் நாங்கள் ஐயா
வேதத்தை ஏந்துகின்றோம்
வாசித்து மகிழுகின்றோம்
தியானம் செய்கின்றோம் - நாங்கள்





                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com