உம்மை நோக்கி
Ummai Nokki
உம்மை நோக்கி ஓடி வருகின்றேன் 
உந்தன் நிழலில் தங்கிடுவேன் உன்னதரே
அளவற்ற அன்பினால் என்னை நேசித்து 
காருண்யத்தினால் என்னை இழுத்து கொண்டீரே 
என்னையே உம்மிடம் தருகிறேன் 
என்னை பிடித்துக்கொள்ளும் அணைத்துக்கொள்ளும்
வழிநடத்தும் கூடவே வாரும் 
வெகுதூரமாய் போன என்னை தேடி 
மறுவாழ்வு தந்தீரே 
மறந்தீரே நான் செய்த துரோகங்களை 
தந்தீரே இழந்து போன மகிமையை 
திருரத்தத்தால் என்னை சுத்திகரித்து
நீதிமானாய் மாற்றினீரே 
அப்பா பிதாவே என்று கூப்பிட 
உரிமையை எனக்கு தந்தீரே

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter