• waytochurch.com logo
Song # 15734

உம்மைப் பாடும் நேரம்

Ummai Paadum Neram



உம்மைப் பாடும் நேரம் எந்தன் ஆன்மா தேடும் - (2)
தண்ணீர் தேடும் மானைப் போல்
உம்மைக் காண ஏங்கிடுதே - உம்மைப்
இயேசு ரட்சகரே என்னைத் தாங்கும் அற்புதரே
அருள் ஜீவ நீரூற்றே எந்தன் தாகம் தீர்ப்பவரே
சாவை வென்றரே - எனில் வாழ்வைத் தந்தவரே
இருள் நீக்கும் பேரொளியே எனைத் தேற்றிக் காப்பவரே

இதோ வருகிறார் ஒருவரே
இதோ வருகிறார் விரைவிலே
இதோ தருகிறார் அமைதியே
இதோ பெறுகிறோம் அனைத்துமே - உம்மைப்

உம்மைப் பாடும் நேரம் எந்தன் ஆன்மா தேடும்
தண்ணீர் தேடும் மானைப் போல்
உம்மைக் காண ஏங்கிடுதே
நேசம் தந்தவரே என்னைக் காக்க வந்தவரே
மனம் தேடும் வல்லவரே எந்தன் சாபம் தீர்த்தவரே
மேய்ப்பர் ஆனவரே எனைத் தேடும் நல்லவரே
சுகமாக்கும் வல்லமையே எனை ஏற்றுக் கொள்பவரே - இதோ வருகிறார்

உம்மைப் பாடும் நேரம் எந்தன் ஆன்மா தேடும்
தண்ணீர் தேடும் மானைப் போல்
உம்மைக் காண ஏங்கிடுதே
வார்த்தையானவரே - எனில் வாசம் செய்பவரே
கரம் நீட்டிக் காத்தவரே எனக்காக மரித்தவரே
காயப்பட்டவரே - புது பார்வை தந்தவரே
கரை தீர்த்து மீட்டவரே கனிவோடு ஏற்பவரே - இதோ வருகிறார்


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com