Ummaithaan ummai mattum உம்மைத்தான் உம்மை மட்டும் தான்
உம்மைத்தான் உம்மை மட்டும் தான்
என் கண்கள் தேடுதே
என் உள்ளம் நாடுதே
மான்கள் நீரோடை வாஞ்சிக்கும் - அதுபோல்
என்னுள்ளம் உம்மை வாஞ்சிக்கும் - தேவா
உம் அன்பை எண்ணும்போது பூலோகம் ஒன்றுமில்லை
எல்லாமே நஷ்டம் என்கிறேன்
வேதம் சொல் சித்தம் செய்கிறேன் - உந்தன்
பாதம் நல் முத்தம் செய்கிறேன் - தேவா
உம்மைபோல் என்ன காக்க மேலோகில் என்னை சேர்க்க
பூலோகில் யாருமில்லையே